நிர்மலாதேவிக்கு எத்தனை ஆண்டுகள் சிறை? பரபரப்பு தீர்ப்பின் விவரங்கள்..!

Siva
செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (18:45 IST)
கல்லூரி மாணவிகளை  தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் முன்னாள் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என்று நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தண்டனை இன்று அறிவிக்கப்படும் என்று செய்தி வெளியானது. இந்த நிலையில் தற்போது நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது
 
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் 2018-ஆம் ஆண்டு துணைப் பேராசிரியை நிர்மலா தேவி, உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட் நிலையில் இந்த வழக்கைசிபிசிஐடி போலீசார் நடத்தி வந்தனர்.
 
இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நிர்மலா தேவி குற்றவாளி என நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் போதுமான ஆதாரம் இல்லாததால் மற்ற இருவர் விடுதலை செய்யப்பட்டனர்.
 
நிர்மலா தேவி மீது 5 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டிருந்த நிலையில் அவரது குற்றம் உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஐந்து வழக்குகளுக்கும் சேர்த்து மொத்தமாக ரூ.2.42 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்