டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கெஜ்ரிவாலை சந்திப்பதற்கு அவரது மனைவி சுனிதாவுக்கு நேற்று திகார் சிறை நிர்வாகம் அனுமதி மறுத்ததாக கூறப்பட்ட நிலையில் இன்று அனுமதி வழங்கி உள்ளதாகவும் இந்த சந்திப்பின்போது டெல்லி அமைச்சர் அதிஷ் என்பவரும் உடன் இருப்பார் என்றும் கூறப்படுகிறது