கனமழை எதிரொலி: மீண்டும் மேம்பாலங்களில் பார்க்கிங் செய்யப்பட்ட கார்கள்..!

Mahendran
வியாழன், 12 டிசம்பர் 2024 (16:20 IST)
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக, நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருவதால், பல இடங்களில் தண்ணீர் தேங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மீண்டும் மேம்பாலங்களில் பொதுமக்கள் கார்களை நிறுத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில், கடந்த 2014 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தினால் ஏராளமான கார்கள் பழுதடைந்து, பல லட்ச ரூபாய் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதை மறந்துவிடாமல், தற்போது பொதுமக்கள் கனமழை பெய்தால் உடனே கார்களை பாலங்களில் நிறுத்த தொடங்கி விடுகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு முதல் சென்னையில் தொடர் கனமழை பெய்து வருவதால், சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் மீண்டும் கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல், ராயபுரம் மேம்பாலமும் பார்க்கிங் பகுதியாக மாறியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இன்றும் மழை பெய்தால், அண்ணா மேம்பாலம் உள்பட மேலும் சில பாலங்களில் கார்கள் நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்