மீனை நன்றாக சுத்தம் செய்து லேசாக உப்பு மஞ்சள் தூள் போட்டு கிளறி 15 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் வெங்காயத்தை இரண்டாக நறுக்கவும். தக்காளியை நான்காக நறுக்கவும். இஞ்சியை விழுதாக அரைக்கவும்.
இப்போது வாணலியில் எண்ணெய் ஊற்றி வெந்தயம், சோம்பு, தாளித்து நறுக்கிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
இதில் மஞ்சள், மிளகாய், தனியா தூள்களை சேர்த்து என்னை பிரியும் வரை கொதிக்க விடவும். அடுத்து தேங்காய் பாலை சேர்த்து கொஞ்ச நேரம் கொதிக்க விட்டு மீனை சேர்க்கவும்.
மீன் 2 அல்லது 3 கொதியில் வெந்துவிடும், குழம்பை இறக்கும் முன் ஒரு சிறிய வெங்காயத்தை தோலுடன் அதில் தட்டிப்போட்டு இறக்கவும். பின்னர் மல்லித்தழையை கொதிக்கும் குழம்பில் போட்டு பரிமாறலாம்.