சிக்கன் சமோசாவை கடையிலதான் வாங்கனுமா என்ன...?

செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (16:24 IST)
தேவையான பொருட்கள்:

சிக்கன் கொத்துக்கறி - 300 கிராம்
பச்சை மிளகாய்  - 4
வெங்காயம் - 250 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது - அரை ஸ்பூன்
கிராம்பு - 6
மைதா - 350 கிராம்
பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி
நெய் - 3 தேக்கரண்டி
கரம் மசாலா - தேக்கரண்டி
கொத்துமல்லி - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கு ஏற்ப



செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதனுடன் பேக்கிங் பவுடரை கலந்து தேவையான உப்புடன் தேவையான தண்ணீர், நெய் சேர்த்து கெட்டியாக பிசைந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

சிக்கனை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, கிராம்பு போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, ப.மிளகாய், தக்காளியை போட்டு நன்றாக வதக்கிய பின்னர் சிக்கன் கொத்துக்கறியை சேர்த்து வதக்கவும். சிக்கன் வெந்ததும் உப்பு, கரம்மசாலா தூள் சேர்க்கவும். நல்ல மணம் வந்ததும் இறக்கி ஆற வைக்கவும்.

பிசைந்து வைத்துள்ள மாவை உருண்டைகளாக பிடித்து வட்டமாக தேய்த்து கொள்ளவும். வட்டங்களை முக்கோண வடிவமாக செய்து சிக்கன் கலவையை வைத்து ஓரங்களில் மூடவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சமோசாவை போட்டு பொரித்தெடுக்கவும். சுவையான சிக்கன் சமோசா தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்