கண்புரை என்பது கண்களில் உள்ள லென்சின் மாற்றத்தால் ஒளியின் ஊடுருவல் திறன் குறைவதால், விழித்திரை மீது விழும் ஒளியின் அளவு குறையக்கூடிய ஒரு நிலையாகும். இது பெரும்பாலும் முதியவர்களை பாதிக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு கண் புரை ஏற்படும் வாய்ப்பு மற்றவர்களைவிட 5 மடங்கு அதிகம்.
கண்களில் உள்ள சிறிய ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பால், சர்க்கரை அளவு அதிகமாகும் போது கண் புரை ஏற்படும். அக்யூஸ் ஹ்யூமரில் அதிகமாகக் கூடிய குளுக்கோஸ் லென்சின் புரதங்களுடன் இணைந்து, லென்சின் ஒளி பரவல் திறனை குறைக்கிறது.
கட்டுப்பாடற்ற சர்க்கரை அளவில், லென்சில் உள்ள என்சைம் குளுக்கோஸை சார்பு மாற்றி, கண் புரைக்கு வழிவகுக்கின்றது. மேலும், சர்க்கரை அதிகமாகும் போது லென்சில் ஆக்சிஜனேற்ற அழுத்தம், எதிர்வினை ஆக்சிஜன் இனங்கள் மற்றும் ப்ரியரேடிக்கல்ஸ் ஆகிய காரணங்களால் கண் புரை நோய் ஏற்படும்.
மேலும் நீரிழிவு நோய் மட்டுமின்றி, உடல் பருமன், புகை பிடித்தல், உயர் ரத்த அழுத்தம், நீண்டகால ஸ்டீராய்டு மருந்துகள் பயன்படுத்துதல், நேரடியாக சூரிய ஒளியில் அதிக நேரம் இருப்பது போன்ற காரணிகளும் இளம் வயதிலேயே கண் புரையை உருவாக்கக் காரணமாக இருக்க முடியும்.
இதற்கான தீர்வாக, அறுவை சிகிச்சை மூலம் கண்களில் உள்ள புரையை அகற்றுவதோடு, செயற்கை லென்ஸ் பொருத்தலாம். அதிநவீன லேசர் முறையிலும் கண் புரையை அகற்றலாம்.