உணவில் சீன உப்பு சேர்ப்பதால் என்ன தீமைகள்?

Webdunia
இரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகப்படுத்துவதால் அதிகமான பசி எடுக்கிறது, நாம் உணவை அடிக்கடி சாப்பிட ஊளைச்சதை போடுகிறது. உடல் எடை கூடினால் தானாக சுகரும் இதய நோயும் இலவசமாக வரும்.
குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு இந்த சீன உப்பு கொடிய விஷமாகும். ஐந்து வயது குழந்தைக்கும் தீராத தலைவலியை உருவாக்கும் தன்மை கொண்டது. சீன உப்பினால் ஏற்படக் கூடிய சாதாரண பிரச்சனைகளில் ஒன்றாக தலைவலி உள்ளது.
 
நரம்பு மண்டலத்தில் அதீத உற்சாகத்தை உருவாக்கி பிறகு பயங்கரமான பலவீனத்தை உண்டாக்கி விடும். இருதய நோய்களாக அதிபயங்கர துடிப்பும் சிலநேரம் வலியும் உருவாக்கும்.
 
முகத்தில் எந்நேரமும் ஒரு எரிச்சல் இருப்பது போலவே சிலர் உணருவார்கள், அரிப்பும் தோன்றும் சிலரது முகம் கருத்திருக்கும்.
 
சீன உப்பை சாப்பிடுவதன் மூலம் இதயத்தில் படபடப்பு ஏற்படவும், இதயப் பகுதியில் வலி ஏற்படவும் மற்றும் இதயம் அடைத்துக் கொள்ளவும் கூடும்.
 
வழக்கமாக இரத்த கொதிப்பு, தைராய்டு, நீரிழிவு, ஆஸ்துமா, உணவு ஒவ்வாமை, அதீத வியர்வை சுரப்பினால் உண்டாகும் நீர்ச்சத்து குறைதல், கண்களில் ரெட்டினா குறைபாடு எல்லாம் உருவாக சீன உப்பு காரணியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்