உடலுக்கு ஆரோக்கியம் தரும் சீதாப்பழம் எந்த நோய்களுக்கு குணம் தருகிறது...?

Webdunia
சீதாப்பழத்தில் கணிசமான அளவு வைட்டமின் ‘சி’ உள்ளதால், சளி பிடிப்பதை தடுக்கும். சளிப் பிடித்தவர்கள், இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் நன்கு சளி குணமாகி நலன் கிட்டும்.
சீதாப் பழத்திலுள்ள பல சத்துக்கள் இதயத்தைப் பலப்படுத்தி, சீராக இயங்கச் செய்யும். இதயம் சம்பந்தமான நோய்கள் வராது காக்கும் 
 
சீதாப்பழத்துடன், பால் சேர்த்து கீர் தயாரித்தால் சுவை சூப்பராக இருக்கும். இதயத்திற்கு இதமான பழம் சீதாப்பழம். காசநோயைக்  குணப்படுத்தும். 
உடலுக்கு குளிர்ச்சியும், நீர்ப் பெருக்கி, மலமிளக்கி, குடல் புண்ணைக் குணப்படுத்தும் சோர்வை நீக்கும். பித்தம் அகற்றி, இரத்தத்தை விருத்தி  செய்யும். நினைவாற்றலை அதிகரிக்கும்.
 
சீதாப்பழச்சாறு குடித்தால், கோடையில் ஏற்படும் கொடும் தாகம் தணியும். உடல் குளிர்ச்சி பெறும். கோடை உபாதைகள் எட்டிப் பார்க்காது.
 
அறுவை சிகிச்சைக்குப் பின், சீதாப்பழம் சாப்பிட்டு வந்தால், உடல் உள்ளுறுப்புகளில் உள்ள இரணங்கள் விரைவில் ஆறும்.
 
சிறுநீர் பிரியாமல் அவதிப்படுபவர்கள், சீதாப்பழச் சாறுடன், சிறிது எலுமிச்சம் பழச்சாறு கலந்து பருகினால், சிறுநீர் தாராளமாகப் பிரியும்.  நீர்க்கடுப்பும் நீங்கும்.
 
சீதாப்பழம் இரத்த விருத்தி செய்யும். சோகை நோயைக் குணப்படுத்தும். இப்பழத்தில் குளுக்கோஸ் கணிசமாக உள்ளதால் உடல் சோர்வை  அகற்றி சுறுசுறுப்பை ஏற்படுத்தும்.
 
சீதாப்பழத்துடன், சிறிது இஞ்சிச்சாறு, கருப்பட்டி சேர்த்து தின்றால், பித்தம் மொத்தமாக விலகும்.
 
சீதாப்பழத்துடன், சிறிது வெள்ளைப் பூண்டு வைத்து மைய்யமாக அரைத்து, தேமல் மீது பூசி வர, தேமல் மறையும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்