முடி உதிர்வை தடுக்கும் இயற்கை அழகு குறிப்புகள்...!
இன்றைய காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும், இயற்கை முறையில் தலைக்குக் குளிக்காமல், இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவற்றால் குளிப்பதாலும் இளம் வயதிலேயே தலை முடி கொட்டி விடுகிறது.
கரிசலாங்கண்ணி எண்ணெய். கரிசலாங்கண்ணி முடிதிர்தல், இள நரை, சொட்டை, முடி உதிர்தல் என பலவகையான கூந்தல் பிரச்சனைகளை அடியோடு ஒழிக்கும்.
முடி உதிர்ந்த இடத்தில் எலுமிச்சம்பழ விதை, மிளகு சேர்த்து அரைத்து தேய்த்து வர முடி வளரும். பூசனி கொடியின் கொழுந்து இலைகளை கசக்கிய சாறு தலையில் தடவிவர முடி வளரும்.
கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும், முடியும் வளரும்.
முடி இல்லாமல் சொட்டையாக இருக்கும் இடத்தில் முடி வளர நேர்வளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து பசுநீர் விட்டு மைய அரைத்து தடவாலாம். முடி உதிர்ந்த பகுதியில் முடி முளைக்க பிஞ்சு ஊமத்தின் காயை அரைத்து பூசினால் புது முடி முளைக்கும்.
கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி, கூந்தலுக்கு தடவி வந்தால் இளநரையானது வராமல் இருக்கும். 6. வெள்ளைப் பூவான கரிசாலையை நன்கு காய வைத்து, அரைத்து பொடி செய்து, ஒரு மாதம் இளநீரிலும், ஒரு மாதம் தேனிலும் கலந்து உண்ண வேண்டும். இதனால் இளநரை மாறும்.
தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயுடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து தலைக்கு பூசி நன்கு மசாஜ் செய்து, குளித்து வந்தால், இளநரையானது போகும். ஆகவே மேற்கூறிய இயற்கையான உணவினாலும், சரியான பராமரிப்பாலும் இளநரையை வராமலும், வந்த இளநரையை போகவும் செய்யலாம்.
கறிவேப்பிலையை சமைக்கும்போது உணவில் அதிகம் சேர்த்து, அதனை சாப்பிட்டால் உடலில் இரும்புச்சத்து அதிகமாகி கூந்தலானது கருமையாக வளரும்.