கடந்த சில ஆண்டுகளாக பிளாக் டீ, பிளாக் காபி குடிக்கும் வழக்கம் பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், பிளாக் டீயை விட பிளாக் காபி சிறந்தது என்று கூறப்படுகிறது.
காலை நேரத்தில் அல்லது வேலை செய்யும் நேரத்தில் விழிப்புணர்வை தருவது காபி என்றும், குறிப்பாக பிளாக் காபி உடலுக்கு உகந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. சர்க்கரை மற்றும் பால் இல்லாமல் தயாரிக்கப்படும் பிளாக் காபி, கலோரிகள் இல்லாதது என்றும் தெரிகிறது.
தேநீரில் குறைவான கலோரிகள் இருந்தாலும், தேநீர் குடிப்பவர்கள் சர்க்கரை, பால் அல்லது தேனை சேர்க்கிறார்கள். இதனால் அது கலோரி நிறைந்த பானமாக மாறிவிடுகிறது. ஆனால், சர்க்கரை மற்றும் பால் இல்லாத பிளாக் காபியில் ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் அதிகம் இருப்பதாகவும், இது நீரிழிவு நோயிலிருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது என்றும் கூறப்படுகிறது.
மேலும், பிளாக் காபி உடல் எடையை குறைக்கவும், சராசரி எடை வைத்திருக்கவும் உதவுகிறது என்றும் கூறப்படுகிறது.