கீழாநெல்லி செடி இலையின் அற்புத மருத்துவகுணங்கள் !!

Webdunia
அற்புதமான மூலிகைக் கீரைதான் ‘கீழாநெல்லி’.இதற்கு கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி என்ற வேறு பெயர்களும் உண்டு. இது குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. நீர்நிலைகள், வயல் வரப்புகள் மற்றும் பாழ் நிலங்களில் வளரக்கூடியது.

நன்கு வளர்ந்த கீழாநெல்லி செடியின் இலையை நன்கு அரைத்து, சுத்தமான வெள்ளாட்டுப் பாலில் கலந்து பத்து முதல் பதினைந்து நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகி விடும்.
 
கீழாநெல்லி கீரையை உடலில் தேய்த்து ஊறவைத்து பிறகு குளித்தால் அரிப்பு சம்பந்தமான நோய்கள் வராது. குளிர் காய்ச்சலுக்கு கீழாநெல்லி ஒரு பங்கும், மிளகு  அரை பங்கும், வெள்ளைப் பூண்டு அரை பங்கும் சேர்த்து நன்றாக அரைத்து மிளகு அளவில் மாத்திரைகளாகச் செய்து காலை மாலை சாப்பிட காய்ச்சல் குணமாகும்.
 
கீழா நெல்லியுடன் சம அளவு கரிசலாங்கண்ணிச் சேர்த்து அரைத்து பசும் பாலுடன் 45 நாட்கள் சாப்பிட கல்லீரல் தொடர்பான நோய்கள், சோகை, இரத்தமின்மை ஆகியவை குணமாகும்.
 
கீழாநெல்லி இலை, பொன்னாங்கண்ணி இலை, சம அளவு அரைத்து மோரில் சேர்த்து 45 நாட்கள் சாப்பிட்டால் மாலைக்கண், பார்வை மங்கல் நோய்கள் குணமாகும்.
 
கீழாநெல்லி இலையை சுத்தம் செய்து அம்மியில் அரைத்து சிறு உருண்டையாக்கி தினம் ஒரு உருண்டை சாப்பிட வேண்டும். தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை கட்டுப்படும். 
 
அதிக கசப்பு என்று நினைப்பவர்கள் கீழா நெல்லி பொடியை நீரில் கொதிக்க வைத்து சிட்டிகை சீரகத்தூள், இனிப்புக்கு பனங்கற்கண்டு அல்லது தேன்சேர்த்து குடித்தால் காமாலை குணமாகும். மோரை நீர்மோராக பெருக்கி அதில் விழுதை கலந்து குடித்தாலும் காமாலை குணமாகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்