குளிர் காலத்தில் முதலில் சருமம்தான் வறட்சியாகும். அவற்றை கட்டுபடுத்த நாம் உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் உடலில் உள்ள சருமத்தை புத்துணர்ச்சி பெறச் செய்ய, சரியான ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளவது முக்கியம்.
தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும், செரிமானம் சீராகும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது. பொதுவாகவே வைட்டமின் சி அமிலத்தன்மையை அதிகப்படுத்தும் என்பதால், சருமப் பிரச்னைகள், ஒவ்வாமை, முடி உதிர்வைத் தடுக்கும், முதிர்ச்சியான தோற்றம் வராது. குளிர்ச்சி அதிகமாக இருப்பதால் வரும் சிறு சிறு குளிர்கால நோய்கள் வராமல் தடுக்கும்.