உணவின் மூலம் சர்க்கரையின் அளவை குறைக்க இயலும் என்பது நாம் அறிந்ததே. கொழுப்பும், புரதமும் நிறைந்த உணவுகள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் என்று நிருபிக்க பட்டுள்ளது.
சைவ உணவுப்பிரியர்களுக்கு புரத உணவுகள் என்றால் தானியங்கள், பால் மட்டும் தான் முக்கிய உணவாக இருக்கும். அவர்களது புரதத்தேவையை நிறைவேற்றுவது சோயா புரதம்.
புரதமும் நார்ச்சத்து நிறைந்த சைவப் புரதம் தான் சோயா. இதில் இரும்பு, மெக்னீசியம், மாங்கனிசு, விட்டமின்கள், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து உள்ளது.
எடையைக் குறைப்பதில் சோயாவுக்கு முக்கிய பங்குண்டு. உடலிலுள்ள கெட்ட கொழுப்பை விரட்டுவதில் சோயா உதவும். இதயத்துக்கும் நல்லது. சோயாவிலிருந்து பெறப்படுகிற ப்ரோபயாட்டிக் தயிரில் உள்ள ஈஸ்ட், செரிமானத்துக்கு மிகவும் நல்லது.
சோயாபீன்ஸில் உள்ள ஐசோபிளேவின் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைப்பதோடு அல்லாமல் இதயக்கோளாறுகள் வருவதைத் தடுக்கிறது. இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது.
பெண்களின் ஹார்மோன் ஆன ஈஸ்ட்ரோஜன் போலவே இருக்கும். மெனோபாஸ் காலத்தில் பெண்கள் சோயாபீன்ஸ் நிறைய சேர்த்தும் போது இதயக்கோளாறுகள் மற்றும் சர்க்கரை நோய் தொடர்பான பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம்.