நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்து காணப்படும் மரவள்ளிக்கிழங்கு !!

மரவள்ளி கிழங்கில் உள்ள இரும்பு சத்து இரத்த சிவப்பணுக்களை உற்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் இரத்த சிவப்பணுக்கள் குறைபாட்டினால் ஏற்படும் அனீமியா உள்ளிட்ட நோய்களை குணப்படுகிறது.

இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்க பயன்படுகிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் பயன்படுகிறது. இதிலுள்ள நார்ச்சத்தானது இதய நோய்கள், பெருங்குடல் மற்றும் புற்றுநோய் ஆபத்துகளை குறைப்பதுடன் நீரழிவு நோயை 
 
இக்கிழங்குகள் உட்கொள்வதால் கர்ப்ப காலத்தில் குழந்தைகளுக்கு பிறவி ஊனம் ஏற்படாமல் பாதுகாக்கிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க  உதவுகிறது.
 
மரவள்ளிக்கிழங்கில் உள்ள நார்ச்சத்தானது உணவினை நன்கு செரிக்கச் செய்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை கழிவாக வெளியேற்றி உடலினை இக்கிழங்கின்  நார்ச்சத்து மலச்சிக்கல், குடல் வலி, குடல்புற்றுநோய் ஆகியவை ஏற்படாமல் பாதுகாக்கிறது. எனவே இக்கிழங்கினை உண்டு நல்ல செரிமானத்தைப் பெறலாம்.
 
இக்கிழங்கில் காணப்படும் ஃபோலேட்டுகள் உள்ளிட்ட பி தொகுப்பு விட்டமின்கள் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு நரம்புக்குறைபாடுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது என்று கூறப்படுகிறது.
 
மரவள்ளியில் உள்ள இரும்புச்சத்து, கால்சியம், விட்டமின் கே ஆகியவை எலும்புகளின் உற்பத்தி மற்றும் பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வாரம் ஒரு முறையாவது ஏதாவது விதத்தில் மரவள்ளிக் கிழங்கை சேர்த்துக் கொண்டால் எலும்பின் அடர்த்தி குறையாமல் பாதுகாக்கலாம்.
 
இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியின் காரணமாக அதிக ஆக்ஸிஜன் உடல் உறுப்புகளுக்கு செலுத்தப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்