நூக்கல் காய்கறியில் ஏ, பி, சி வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் பொட்டாசியம் கூறுகள் உள்ளன. ஒரு கப் நூக்கலில் 27 மில்லி கிராம் சோடியம் உள்ளது.
நூக்கல் காய்கறியை பச்சையாக சாப்பிடலாம் அல்லது கீரைகளை போல சமைத்தும் சாப்பிடலாம். இது சாப்பிடுவதற்கு ப்ரோக்கோலி, முட்டைகோஸ் போன்ற சுவையை கொண்டது. இதன் இலைகள் கூட சாப்பிடக் கூடியவை. இதன் இலைகளில் தாதுக்கள், கரோட்டின்கள், வைட்டமின்-ஏ, வைட்டமின்-கே மற்றும் வைட்டமின் பி போன்ற சத்துக்கள் உள்ளன.