முருங்கை கீரையில் உள்ள சத்துக்களும் அதன் மருத்துவ பயன்களும்...!!

Webdunia
முருங்கை கீரையில் கால்சியம், இரும்புச் சத்து, விட்டமின் பி, பி2, வைட்டமின் சி சத்துகள் மிகுதியாக உள்ளன. முருங்கை பூவைப் பருப்புடன் சேர்த்து சமைத்து  சாப்பிட உடல் பலம் பெறும். முருங்கை காயை எந்த வகையிலாவது சமைத்து தொடர்ந்து சாப்பிட சளி குறையும்.
முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. முருங்கைக் கீரையின் சாறு இரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்க வல்லது.
 
நீரிழிவு பிரச்சனை உள்ளவர்கள் முருங்கையைப் போன்ற மாமருந்து இல்லை என்கிறார்கள். குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கை  வகிக்கிறது முருங்கை.
 
முருங்கையின் மூலம் கிடைக்கிற புரதமானது முட்டை, பால் மற்றும் இறைச்சியில் கிடைக்கக்கூடிய புரதத்துக்கு இணையானது. மனிதர்களுக்குத் தேவையான  20  அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத 8 அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இறைச்சியில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.
 
ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு அதிகமாகும்.
 
மாலைக் கண் தீர, இரத்தம் விருத்தியாக முருங்கை கீரையை வதக்கியோ, கூட்டு கீரையாக கடைந்தோ சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் முக்கியமாக மாலைக்  கண் நோய் வராமல் தடுக்கலாம். இரும்புச் சத்து மிகுதியாக உள்ளதாலும் விட்டமின் - ஏ சத்து உள்ளதாலும் இவ்வாறு பயன்படுகின்றது.
 
முருங்கைக்கீரை மட்டுமின்றி, முருங்கைப் பூவும் மருந்தாகப் பரிந்துரைக்கப்படுவதுண்டு. முருங்கைப் பூவை பொடிமாஸ் மாதிரி செய்து சாப்பிடலாம்.   அரைவேக்காடு வேக வைத்த பாசிப் பருப்புடன், முருங்கைப் பூவையும் பொடியாக நறுக்கிய வெங்காயமும் சேர்த்து சமைத்து சாப்பிடுவது குழந்தையின்மைப் பிரச்சினை தீர உதவும். கர்ப்பப்பை கோளாறுகளை சரி செய்யும்.
 
முருங்கைக்கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் சி யும்,  வாழைப்பழத்தில் உள்ளதைவிட 3 மடங்கு அதிக பொட்டாசியமும், கேரட்டில் உள்ளதைப் போல 4 மடங்கு அதிக வைட்டமின் ஏவும், பாலில் உள்ளதைவிட 4   மடங்கு அதிக கால்சியமும் உள்ளது.
 
மற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு மகத்துவம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்