இத்தனை அற்புத சத்துக்களை கொண்டதா நெல்லிக்காய்...?

வேறு எந்த காயகனியிலும் இதிலுள்ள வைட்டமின் 'சி' அளவைப் போல் பெற இயலாது. ஒரு நெல்லிக் காயில் முப்பது ஆரஞ்சுப் பழங்களில் உள்ள வைட்டமின் சி  சத்து உள்ளது.
நெல்லிக்காய் சாறு 15 மி.லி. தேன் 15 மி.லி. எலுமிச்சைச்சாறு 15 மி.லி. கலந்து காலை மட்டும் சாப்பிட்டு வர மதுமேகம் முற்றிலும் தீரும். 15 கிராம் நெல்லிக்  காயை இடித்து அரை லிட்டர் நீரில் இட்டு 100 மி.லி.யாகக் காய்ச்சி 20 மி.லி.தேன் கலந்து 40 மி.லி.யாக 3 வேளை 4 நாள் சாப்பிட மிகு பித்தம் தணியும்.
 
ஆப்பிளில் உள்ள அனைத்து குணங்களும் இந்த காட்டு நெல்லிக்காயில் உள்ளது.எனவே அனைவரும் தினமும் ஒரு நெல்லிக்காய் கட்டாயம் எடுத்து கொள்ள  வேண்டும். 
 
நெல்லியை இடித்துச் சாறு பிழிந்து தேன் சேர்த்து சிறிதளவு திப்பிலிப் பொடி கலந்து சாப்பிட்டு வர சுவாச காசம் குணமாகும். உலர் பழத்தைச் சாப்பிட்டு வர  கண்பார்வை கூடும். வயிற்றுப்போக்கு நிற்கும்.
 
நெல்லிச்சாற்றை அருந்தி வர நுரையீரல் பெருக்கம் தீரும். புழுக்களை அழிக்கும். நெல்லியை அரைத்து சிறிதளவு குங்குமப்பூ கலந்து ரோஜா நீருடன் கலந்து குடிக்க  தலைவலி, மூலநோய் நீங்கும்.
 
நெல்லிச்சாறு உடலிலுள்ள அதிக சர்க்கரையைக் குறைக்கும். நாள்தோறும் ஒரு நெல்லிக்கனி தின்றால் இதயக் கோளாறுகள் நீங்கும். நரம்புத் தளர்ச்சி, இளநரை,  தோல் சுருக்கம் போன்றவை குணமாகும்.
 
பாலில் சிறிதளவு நெல்லிச்சாறு கலந்து சாப்பிட்டுவர கீல்வாதம், நரம்புத் தளர்ச்சி, மூளைச்சூடு ஆகியவை குணமாகும். நெல்லி இலைக்கொழுந்து ஒரு கைப்பிடி அளவிற்று எடுத்து, அரைத்து மோரில் கலந்து சீதக் கழிச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம்.
 
நரம்பு மண்டலத்தை தூண்டி வேலை செய்கிறது. மூளை செல்களுக்கு புத்துணர்ச்சியளிப்பதால், மனத்தெளிவு, புத்திக்கூர்மை மற்றும் ஞாபசக்தி உண்டாகிறது.  நுரையீரலை பலப்படுத்தி சுவாச நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது. உடல் எடையை கூட்டாமல் தசைகளுக்கு பலம் அளிக்கக்கூடிய தன்மை நெல்லிக்காய்க்கு  உண்டு.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்