பூசணி விதைகளை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் மருத்துவ பலன்கள் !!

Webdunia
புதன், 16 பிப்ரவரி 2022 (14:37 IST)
பூசணி விதைகளை சாப்பிட்டு வந்தால் உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.


சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்க நினைப்பவர்கள் பூசணி விதைகளை சாப்பிடலாம். பூசணி விதைகளை சாப்பிட்டு வந்தால் உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

பூசணி விதைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமான அளவில் இருப்பதால் புரோஸ்டேட் வளர்ச்சியைத் தடுக்கும். ஆண்களின் புரோஸ்டேட் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஜிங்க் சத்து மிகவும் அவசியமானது.

முதுமைக் காலத்தில் கனிமச்சத்துக்கள் குறைபாட்டினால் எலும்புகளின் அடர்த்தி குறைந்து ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுவதற்கான வாய்ப்பை தடுக்கிறது.

தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு கையலவு பூசணி விதை சாப்பிட்டு வர பூசணி விதைகளில் இருக்கக்கூடிய அமிலம் தூக்கத்தை தூண்டும்.

பூசணி விதையில் இயற்கையாகவே ஜிங்க் மற்றும் பாஸ்பரஸ் அதிக அளவில் உள்ளது. இது எலும்புகளின் வலிமையை அதிகரித்து, பல பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்