இரும்புச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின்கள் மற்றும் இதர தாதுக்கள் மணத்தக்காளி கீரையில் அதிகளவில் நிறைந்திருக்கின்றன. மணத்தக்காளி கீரையை வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
தொண்டை கட்டு, வீக்கம் மற்றும் தொண்டை புண் உள்ளவர்களுக்கு இந்த கீரை விரைவில் நிவாரணம் அளிக்கும். எனவே வாரம் இரண்டு முறை இந்த கீரையை உணவில் சேர்த்து வந்தால், தொண்டை கட்டு, வீக்கம் மற்றும் தொண்டை புண் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
வயிற்றுபுண் உள்ளவர்கள், மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வயிற்றுபுண் மட்டுமின்றி, வாய்ப்புண்ணும் குணமாகும். ஏனெனில் வயிற்றுபுண் உள்ளவர்களுக்கு வாய்ப்புண்ணும் இருக்கும்.