தக்காளி பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் என்ன..?

புதன், 16 பிப்ரவரி 2022 (13:25 IST)
எலும்புகள் வலுவாக இருப்பதற்கு தக்காளியை தினமும் உணவில் சேர்க்கலாம். வைட்டமின் கே மற்றும் கால்சியம் சத்து தக்காளி பழத்தில் வளமான அளவில் இருப்பதால், தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.


தக்காளியில் குரோமியம் வளமான அளவில் இருப்பதால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சரியான அளவில் பராமரிக்க உதவுகிறது.

தக்காளி கண் பார்வை ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது. தக்காளியில் வைட்டமின் ஏ இருப்பதால் கண் பார்வையை மேம்படுத்தி, மாலைக்கண் நோய் வராமல் தடுக்க உதவுகிறது.

தக்காளி கூந்தலை அழகாக வைப்பதற்கு உதவுகிறது. தக்காளியில் வைட்டமின் ஏ இருப்பதால் கூந்தலை திடமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்கும்.

இயற்கையாகவே தக்காளி புற்றுநோய்க்கு எதிராக போராடும் தன்மை கொண்டது. அணுக்களை பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்களும் தக்காளியில் உள்ளன.

தக்காளியில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளதால், உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் தக்காளி பழத்தில் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்