உடல் எடையினை குறைக்க உதவும் கொண்டைக்கடலை !!

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (09:17 IST)
உடல் எடையினை குறைக்க நார்சத்து மிக மிக முக்கியம். நார்சத்து நிறைந்த உணவுகளை உண்ணும்போது உங்களின் உடல் எடை மிக வேகமாக குறையும். கொண்டைக்கடலையில் நார்சத்து உள்ளதால் அதனை உண்ணும்போது உடல் எடை வேகமாக குறையும்.


கொண்டைக்கடலையில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இதில் செலினியம் என்னும் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இது உங்களுக்கு புற்று நோய் ஏற்படாமல் தடுக்க உதவும். மேலும் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் உங்கள் உடலில் செல் அழிவு ஏற்படாமல் தடுக்கும். எனவே தினமும் கொண்டைக்கடலையினை உண்டு வரவும்.

முடியின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு புரதம் மிக மிக முக்கியம்.கொண்டைக்கடலையை புரதம், இரும்பு, ஜின்க் மற்றும் பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உங்களின் முடி ஆரோக்கியமாக வளர உதவும். மேலும் முடி கொட்டுதலை தடுக்கும்.உங்களின் முடி வேரிலிருந்து வலுவாக வளர மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது.

கொண்டைக்கடலையில் அதிக அளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் உள்ளது. உணவுகளில் உள்ள கால்சியம் சத்தினை உரிய மெக்னீசியம் சாது மிகவும் முக்கிய பங்கினை வகிக்கின்றது. மேலும் எலும்பு மற்றும் பற்களின் வலிமையினை அதிகரிக்கின்றது. எனவே உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் தினமும் கொண்டைக்கடலையினை உட்கொண்டு வந்தால் நிறைய பயன் பெறலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்