பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உணவுகள் !!

Webdunia
ஆப்பிள்: ஈறுகளின் ஆரோக்கியத்தை தூண்டுவதோடு, பற்களில் சொத்தையை உண்டாக்கும். ஆப்பிளை மென்று சாப்பிடும் போது, வாயில் எச்சில் சுரப்பு அதிகரித்து,  வாயில் உள்ள அமிலத்தன்மை குறைந்து, வாய் துர்நாற்றமும் தடுக்கப்படுகிறது.

கீரைகள்: பசலைக்கீரை மற்றும் கேல் போன்றவை ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டவை. முக்கியமாக இவை வாய் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக்கூடியவை.
 
வாய் என்பது பற்கள், ஈறுகளை உள்ளடக்கியது. வாயின் வழியாகத் தான் நாம் உண்ணும் உணவுகள் உடலுக்குள் செல்கிறது. எனவே நுழைவாயிலாக இருக்கும் வாயை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது நமது கடமையாகும். அதிலும் பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதே முக்கியம்.
 
பால்: எலும்புகளை வலிமைப்படுத்த உதவுவதோடு மட்டுமின்றி, பற்களின் எனாமலைப் பாதுகாக்கும். ஆகவே உங்கள் பற்கள் ஆரோக்கியமாக இருக்க  வேண்டுமானால், தினமும் பால் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
 
காய்கறி: செலரி, கேரட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இவ்வாறு காய்கறிகளை பச்சையாக மென்று சாப்பிடுவதால் ஈறுகளின் வலிமை  தூண்டப்படுவதோடு, பற்களின் ஆரோக்கியமும் பராமரிக்கப்படும்.
 
நட்ஸ்களை மென்று சாப்பிடும் போது வாயில் அதிகளவு எச்சில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது வாயில் உள்ள பாக்டீரியாக்களை நீக்க உதவி புரிந்து, சொத்தை பற்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
 
ப்ளாக் டீயில் உள்ள பாலிஃபீனால்கள் வாய் துர்நாற்றத்தை எதிர்த்துப் போராட உதவும். மற்றும் இவை பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் குறைக்க உதவி புரிந்து, சொத்தைப் பற்கள் மற்றும் ஈறு நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்