இளநரையை போக்க உதவும் அற்புத இயற்கை வைத்திய குறிப்புகள் !!

Webdunia
வெங்காயச் சாற்றை தலையில் தடவி ஊறவைத்து குளித்தால், முடியானது அதன் இயற்கை நிறத்தைப் பெறும். அன்றாடம் நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தாலோ அல்லது நெல்லிக்காய் எண்ணெய்யை தலைக்கு தடவி வந்தாலோ, நரைமுடியில் இருந்து விடுதலை பெறலாம்.

முசுமுசுக்கை இலையின் சாறு மற்றும் நல்லெண்ணெயை சம அளவு சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு, வாரம் ஒருமுறை அந்த எண்ணெய்யைத் தேய்த்து  குளித்து வந்தால் இளநரை மாறும்.
 
அன்றாடம் உண்ணும் உணவில் கறிவேப்பிலையை சேர்த்து வந்தால் இளநரை மறையும். இளநரையை மாற்றும் சக்தி பசுவெண்ணெய்க்கு உண்டு. அதனால் இதனுடன் கறிவேப்பிலைப் பொடியை சேர்த்து சாப்பிட இளநரை மறையும். 
 
தண்ணீரில் உலர்ந்த நெல்லிக்காயை இரவு ஊறவைத்து, அந்தத்தண்ணீரை தலையில் தேய்த்து குளித்து வந்தால் இளநரை மாறும். தேங்காய் எண்ணெய்யில்  கறிவேப்பிலையை அரைத்து, காய்ச்சி தினமும் தேய்த்து வர இளநரை மறையும்.
 
தினமும் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை நன்றாக அரைத்து ஒரு கவளம் சாப்பிட்டு வந்தால் ஒரு மாதத்தில் இளநரையைப் போக்கலாம். நரைமுடி கருப்பாக மாற முளைக்கீரை உதவும். எனவே முளைக்கீரையை அடிக்கடி சாப்பிடலாம்.
 
செம்பருத்தியின் இலை மற்றும் பூவை அரைத்து, அதனை தலையில் தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து குளித்து வந்தால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும், இதனை வாரத்துக்கு ஒரு முறை செய்ய வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்