வெந்தயத்தை எதனுடன் சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்தை கொடுக்கும்...?

Webdunia
வெந்தயத்தில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் முடி கொட்டாது, சீக்கிரத்தில் நரை வராது. அத்துடன் முடியும் நன்றாக வளரும்.

* தீக்காயத்திற்கு வெந்தயத்தை ஊறவைத்து விழுதாக அரைத்து பற்றுப் போட்டால் சீக்கிரத்தில் குணம் கிடைக்கும்.
 
* அவுரி இலையுடன் சிறிது வெந்தயம் மிளகு சேர்த்து கஷாயம் செய்து குடித்தால் பூரான் கடி விஷம் முறியும்.
 
* தினசரி 15 கிராம் வெந்தயத்தை தவறாமல் உண்டு வந்தால், ரத்த அழுத்தம் சீராகும், ரத்தம் சுத்தமாகும், ரத்தத்தில் உள்ள கொழுப்பும் குறையும். 
 
* ஜீரண சக்தி அதிகரித்து உடல் எடையும் குறையும். 
 
* வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து சீயக்காய் போல தலைக்குத் தேய்த்துக் குளித்தால் கூந்தல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
 
* வாயுத் தொல்லை உள்ளவர்கள் தினமும் காலையில் பல் விளக்கியதும் ஒரு தேக்கரண்டி வறுத்துப் பொடித்த வெந்தயப் பொடியைச் சாப்பிட்டால் வாயு  வெளியேறிவிடும்.
 
* வெந்தயத்தையும், நெல்லி இலையையும் சேர்த்து எட்டு மணி நேரம் ஊற வைத்து அந்த நீரைக் குடித்து வந்தால் சீதபேதி நிவர்த்தியாகும்.
 
* பச்சை வெங்காயத்துடன், ஊற வைத்த வெந்தயத்தை சேர்த்து சாப்பிட்டு வர விந்து உற்பத்தி அதிகரிக்கும். 
 
* ஒரு துண்டு இஞ்சியுடன் சிறிது வெந்தயம் வைத்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் விலகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்