முருங்கை ஒரு சத்துள்ள உணவாகும். இதில் உடலுக்குத் தேவையான 90-க்கும் மேலான அனைத்து சத்துக்களும் உள்ளன. புரோட்டீன், இரும்பு, கால்சியம், வைட்டமின் B6, A & C, ரிபோஃப்ளாவின் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் கணிசமான அளவில் இதில் உள்ளன.
காய்ந்த தலை உச்சி, தலைமுடி உள்ளவர்களுக்கு இது பலன் தரும். ஏனெனில் இது முடியின் மிருதுத்தன்மையை மேம்படுத்த உதவுகிறது. புரோட்டின் உட்பட பல சத்துக்களை நுண்ணறைகளில் இது செலுத்துவதால் தலைமுடிக்குப் புத்துணர்வூட்டி முடியை வலுவாக ஆக்கி, முடிகொட்டுவதையும் தவிர்க்கும்.