விட்டமின் குறைபாடு: உடலில் சரியான அளவு விட்டமின் இல்லாமையாலும் முடி உதிரலாம். நாம் உண்ணும் உணவில் சரியான அளவில் வைட்டமின், மினரல் உள்ளதா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். வைட்டமின் பி (B), வைட்டமின் இ (E) மற்றும் இரும்பு சத்து நிறைந்த உணவை எடுத்துகொள்ள வேண்டும்.
தலைமுடி சீவும் முறை: தலையை நாம் சீவும் முறை கூட முடி கொட்டுவதற்கு ஒரு காரணமாக அமையலாம். நீளமான முடியாய் இருந்தால் முதலில் தலையில் சிக்கில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிறகு தலையின் உச்சந்தலையில் இருந்து தலைமுடி நுனி வரை சீப்பை வைத்து சீவ வேண்டும். இம்முறை தலையில் இரத்த ஓட்டம் சீராக பாய்வதற்கு உதவுகிறது.