வறுத்து பூண்டு சாப்பிட்டால் என்ன நன்மைகள் தெரியுமா...?

Webdunia
பொதுவாக நாம் பூண்டை பச்சையாக சாப்பிடுவதால் ஆரோக்கியம் நமக்கு அதிகமாகவே கிடைக்கின்றது. அதிலும் வறுத்து சாப்பிட்டால் சில சிறப்பு நன்மைகள்  இருக்கின்றது. இது உடலில் நடக்கும் அதிசயம் என்றே எடுத்துக் கொள்ளலாம்.

ஆறு பூண்டு பற்களை சாப்பிட்ட பின் ஒரு மணி நேரத்திற்கு பிறகு இரைப்பையில் உள்ள உணவு நன்கு செரிமானம் அடைய இது உதவுகின்றது. இது ஒரு சிறந்த  உணவாகவும் பயன்படுகின்றது. உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் கெட்ட நீர்மச்சத்து மற்றும் கொழுப்புச்சத்தை வெளியேற்றுகின்றது.
 
உடலில் கெடுதல் தரக்கூடிய கெட்ட பாக்டீரியாக்களை பூண்டில் உள்ள ஆன்டிபாக்டீரியாவானது இரத்த நாளங்களுக்குள் சென்று அவற்றை வெளியேற்றுகிறது.  பூண்டு ஆரோக்கிய உணவில் சிறந்து விளங்குகின்றது. தினமும் பூண்டு உண்று வருவதானால் நம் உடலிற்கு ஒரு ஆரோக்கிய வளையமாக உள்ளது.
 
வறுத்த பூண்டு சாப்பிட்டால் உடலில் புற்றுநோய் செல்களை முழுவதுமாக அழிக்க பயன்படுகின்றது. கொலஸ்டராலின் அளவை சீராக வைத்துக் கொள்கிறது.  உடலில் உள்ள தமணிகளை சுத்தம் செய்து இதய நோய் வராமல் தடுத்து காத்துக் கொள்கின்றது.
 
எலும்புகளை பலமாக வைத்துக் கொள்கின்றது. பூண்டு உடலுக்கு நோய் எதிர்ப்பு மண்டலமாகவும் இருக்கின்றது. பூண்டின் குணத்தால் உடலின் சோர்வை நீக்குகின்றது. உடலில் உள்ள செல்களின் வாழ்நாளை நீடிக்கச் செய்கின்றது.
 
உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றப்படும் மற்றும் தேங்கியிருக்கும்  கொழுப்புக்கள் கரைய  ஆரம்பிக்கும்.
 
பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், இரத்த நாளங்களில் நுழைந்தப் பின், இரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கும். பூண்டில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்படுவதோடு, பூண்டு உடலுக்கு நல்ல பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தும்.
 
கொலஸ்ட்ரால் அளவுகள் சீராக்கப்படும். தமனிகள் சுத்தம் செய்யப்படும் மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். இரத்த அழுத்தத்தை சீராக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்