நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் பேரீச்சம் பழம் !!

Webdunia
சனி, 28 மே 2022 (17:57 IST)
தினமும் இரவில் படுக்க செல்லும் முன்னர் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேரீச்சம் பழத்தினையும் உண்டு வந்தால் உடல் நல்ல பலம்பெறும். புதிய ரத்தமும் உண்டாகும். தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும்.


கண் சம்மந்தமான கோளாறுகளும், நரம்பு சம்மந்தமான கோளாறுகளும் நீங்கும். தொற்று நோய் கிருமிகள் நம்மை அணுகாது. பல் சம்மந்தமான வியாதிகளும் குணமடைந்து, பல் கெட்டிப்படும்.

ஃபிளாவனாய்டுகள், கரோட்டினாய்டுகள், பினோலிக் அமிலங்கள் போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இது அல்சைமர் போன்ற நோய்களைத் தடுக்க உதவுகிறது.

பல வகையான புற்றுநோய்கள் ஏற்படுவதை தடுப்பதுடன், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நீரிழிவு மற்றும் பிற நாட்பட்ட நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது.

மூளை செயல்பாட்டை ஊக்குவிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. நாள்தோறும் பேரிட்சை சாப்பிட்டால் எலும்பு ஆரோக்கியம் மேம்படும். மலச்சிக்கலை குணப்படுத்தும். உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்