சில விதி முறைகள் வில்வ இலைகளை பறிக்க உண்டு. அமாவாசை, பௌவுர்ணமி, மாதப்பிறப்பு, திங்கட்கிழமை, அஷ்டமி, நவமி, சதுர்த்தி நாட்களில் வில்வம் இலைகளை பறிக்கக் கூடாது. முன் நாட்களில் பறித்து கொள்ள வேண்டும். வில்வ இலைகளை சுத்தம் செய்து எத்தனை தடவை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். வில்வம் காய், பழத்தை யாகத்துக்கு பயன்படுத்தலாம். வில்வதளத்தை பறித்த பிறகு 6 மாதம் வரை வைத்து வீட்டில் பூஜை செய்யலாம்.