வீட்டில் குங்கிலியம் புகை போடுவதால் என்ன பலன்கள்...?

சனி, 28 மே 2022 (13:41 IST)
சிவாலயங்களில், சித்தர்களின் இடங்களில் யார் தினமும் குங்கிலியப் புகை போடுகின்றார்களோ, அவர்களுக்கு அனைத்து தெய்வீக சூட்சும ரகசியங்களும் தெரியவரும் என அகத்தியர் தனது வாத காவியம் நூலில் கூறுகிறார்.


எமதூதர்களிடம் இருந்து விடுதலை பெறும் சக்தி அவனுக்கு மட்டுமல்லாமல், அவன் நினைத்தால் மற்றவர்களையும் எமதூதுவர்களிடம் இருந்து மீட்கும் சக்தியையும் பெறும் ஆற்றலையும் அவன் பெறுவான்! இது சித்தர்கள் உபதேசித்த சிவாலய வழிபாட்டு ரகசியங்களில் ஒன்று ஆகும்.

குங்கிலிய மரங்களிலிருந்து இறப்பர் பால் போல வடியும் ஒரு பிசினே, வீடுகளில் நாம் உபயோகிக்கும் குங்குலியம். இறை வழிபாடுகளில் மத பாகுபாடு கடந்து அனைத்து மதங்களிலும் சாம்பிராணி, குங்குலியம் போன்றன  புகை இடம் பெறுகிறது.

குங்கிலியபுகையே, அக்காலங்களில் அரசர்கள், பெரும்செல்வந்தர்கள் இருப்பிடங்களில், வாசனைப்புகையாகவும், கொடிய நச்சுக்களைப் போக்கக்கூடியவையாகவும் பயன்பட்டன. குங்கிலியத் தூளை நெருப்பில் போட்டு புகைக்க வீட்டிலுள்ள விஷ காற்று சுத்தப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்