உடலுக்கு தேவையான ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ள தேங்காய் பால் !!

Webdunia
செவ்வாய், 4 அக்டோபர் 2022 (11:32 IST)
தேங்காய் பால் சாப்பிடுவதால் நீரழிவு நோய் குணமாகும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், எலும்புகளை வலுமைப்படுத்தும் இது போன்ற உடலுறுப்புகளை பாதுகாப்பாக வைத்திருக்கும். நோய்களை குணப்படுத்துவது மட்டுமல்லாமல் தேங்காய் பாலில் மாங்கனீஸ் சத்துக்கள், செலினியம், கால்சியம் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.


ஒரு கப் தேங்காய் பாலில் 89 மில்லிகிராம் மெக்னீசியம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மெக்னீசியத்தால் நரம்புகள் அமைதியாகும். அது மட்டுமில்லாமல் நமது இரத்தக் கொழுப்பு கட்டுப்பாட்டில் இருக்கும்.

தேங்காய் பாலில் இருக்கும் நார்ச்சத்து அதை உட்கொண்ட பின் வெகுநேரம் பசிப்பதைத் தடுக்கிறது. அதனால் நமது உடல் எடை தானாகவே குறைகிறது. சில பேருக்கு அதிகமாகவே தலை முடி உதிர்வு ஏற்படும். என்ன செய்தாலும் அதை கட்டுப்படுத்த முடியாத நிலையில் தேங்காய் பால் நிச்சயம் ஒரு நல்ல தீர்வைக் கொடுக்கும்.

தேங்காய் பாலில், ஆன்டி பாக்டீரியல், ஆன்டி பங்கல் மற்றும் வைரஸ் பிரார்ப்படீஸ் அதிகம் உள்ளது. அதனால் இதைப் பருகினால், உடலில் எதிர்ப்புச் சக்தி தானாகவே அதிகரிக்கிறது. தேங்காய் பால் பருக இயலாதவர்கள் தினம் ஒரு இளநீர் பருகினால் நலம் விளைவிக்கும்.

தேங்காய் பாலில் வைட்டமின் சி, இ, பி1, பி3, பி5, பி6, இரும்புச்சத்து, செலீனியம், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துகள் உள்ளன. பசுவின் பால் ஒத்துக்கொள்ளாதவர்கள் தேங்காய் பாலை சாப்பிடலாம்.

Edited by Sasikala
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்