உடைத்த கடலை பருப்பில் அதிகளவு புரதம் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைத்திருக்கின்றன. இதை அதிகளவு உண்பவர்களுக்கு உடலுள்ள எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெற்று உடலுக்கு அதிகளவு ஆற்றலை தருகிறது.
நீண்ட நேரம் கடின உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் உடைத்த கடலை பருப்புகளை சிறிதளவு சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த சக்தியை தரும். உடைத்த கடலை பருப்பை சாப்பிட்டால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உயரதிற்கு ஏற்ற உடல் எடையை பெற உதவுகிறது. உடல் பருமன் உள்ளவர்கள் பொட்டுக்கடலையை சாப்பிட்டால் உடல் எடை குறையும், உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
உடைத்த கடலை பருப்பில் உள்ள நார்ச்சத்து, செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும், உள்ளுறுப்புகளை சுத்தம் செய்து ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.