மஞ்சள் பூசணிகாய் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு மிகவும் நல்லது. சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்பட மஞ்சள் பூசணிகாய் உதவுகிறது. மேலும் சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை பிரச்சனை உள்ளவர்கள் பூசணிக்காய் ஜூஸை தினமும் மூன்று வேளை அரை டம்ளர் அளவு தொடர்ந்து 10 நாட்கள் குடித்து வந்தால் இப்பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
மஞ்சள் பூசணியில் வைட்டமின் சி மற்றும் இதர கனிமச்சத்துக்கள் வளமான அளவில் உள்ளன. எனவே தினமும் ஒரு டம்ளர் மஞ்சள் பூசணி ஜூஸை குடித்து வந்தால், நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலை தாக்கும் பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து, உடலைப் பாதுகாக்கும்.
செரிமான பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் தினமும் சிறிதளவு பூசணி ஜூஸைக் குடித்து வாந்தால், செரிமானம் சிறப்பாக நடைபெறுவதோடு, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.