தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !!

Webdunia
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இந்த முட்டையில் இருப்பதால் இதய பிரச்சினைகள் ஏற்படாமல் காக்கிறது. எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு முட்டையில் உள்ள செலினியம் அதிக ஆற்றலை தருவதாக ஆய்வறிக்கைகள் சொல்கிறது.

தினமும் 1 முட்டை சாப்பிடுவதால் உடல் எடை குறையும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக காலை உணவில் இதனை சேர்த்து கொண்டால் மிக  விரைவிலே உடல் எடை பிரச்சினை தீர்ந்து விடும்.
 
முட்டையில் லுடீன் என்கிற மூல பொருள் நிறைந்துள்ளதால் கண்களுக்கு அதிக வலிமையை தருகிறது. 
 
வைட்டமின் டி முட்டையில் அதிகம் நிறைந்துள்ளது. எனவே, இவை எலும்புகளுக்கு வலிமையை தரவல்லது. அதாவது, கால்சியமை எலும்புகளுக்கு அதிகமாக எடுத்து கொடுக்க வைட்டமின் டி உதவுகிறதாம்.
 
உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்கள் நாள் ஒன்றுக்கு ஒன்று என்ற விதத்தில் சாப்பிட்டாலே போதும். மற்ற உணவுகளில் இருந்தும் கொழுப்புச்சத்துகள்  கிடைப்பதால், இதனை அவரவர் தேவைக்கேற்பதான் சாப்பிட  வேண்டும்.
 
சர்க்கரைநோய் இருப்பவர்கள் முட்டை சாப்பிடுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு இதனால் இதய நோய்    ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. 
 
முட்டையுடன் கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது சிறந்ததல்ல. இதன் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிட்டாலே போதுமானது. மஞ்சள் கருவை நீக்கிய  ஆம்லெட், அவித்த முட்டையாகவும் சாப்பிடலாம். ஆரோக்கியமான இதயத்துக்கு தரமான புரதச்சத்தும் அவசியம்.
 
தினம் ஒரு முட்டை உண்பது ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஆராய்ச்சி முடிவு ஒன்று தெரிவிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்