சாதாரண உப்பில் இருப்பதை போலவே இந்து உப்பில் சோடியம் குளோரைடு, அயோடின் சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், குரோமியம், இரும்பு, துத்தநாகம், போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது.
குளிர்ச்சி தன்மை உடைய இந்த உப்பினை நாம் உபயோகப்படுத்தும் பொழுது நம் பசியை தூண்டுகிறது. எளிதில் செரிமானமாகும் திறன் உள்ளது. மலம் கழிப்பதில் கடினம் இருந்தால் அதனை சரி படுத்துகிறது. மூல வியாதியை போக்க, இந்த உப்பு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
இமயமலை பகுதிகளில் இந்த இந்துப்பானது மலைகளில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. இந்து உப்பானது வெள்ளை, சிவப்பு மற்றும் ஊதா நிறங்களில் காணப்படுகின்றது சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த உப்பு பயன்படுத்தப்படுகிறது.
தொண்டை வலி மற்றும் சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கிறது. மூக்கு, காது, ஆஸ்துமா பிரச்சினைகளை கட்டுப்படுத்துகிறது.