மன அழுத்தம் இருந்தால் எந்த மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டி இருக்கும்...?

மன அழுத்தம் இருந்தால், பதட்டம் ஏற்படும். இவ்வாறு பதட்டத்தின் போது இதய துடிப்பானது அளவுக்கு அதிகமாக இருப்பதால், உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். ஆகவே அடிக்கடி பதட்டம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.

பொதுவாக டென்சன் ஏற்பட்டாலே தலைவலி ஏற்படும் என்பது தெரிந்த ஒன்றே. ஆனால் அதிகமான அளவில் மன அழுத்தமானது இருந்தால், மூளைக்கு செல்லும்  இரத்தக்குழாய்களிலும் அழுத்தம் மற்றும் துடிப்பு அதிகரிக்கும். இதனால் கடுமையான ஒற்றை தலைவலிக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.
 
சிலருக்கு இளமையிலேயே வழுக்கை ஏற்படுவதற்கு காரணமும் மனஅழுத்தம் தான். எனவே அதிக வேலைப் பளுவினால் டென்சன் மற்றும்  மனஅழுத்தம்  இருந்தால், உடனே அதனை சரிசெய்ய பாட்டு கேட்பது, உடற்பயிற்சி செய்வது, விளையாடுவது என்பனவற்றில் ஈடுபட வேண்டும்.
 
மன அழுத்தம் இருந்தால், அடிக்கடி மறதி ஏற்படும். ஏனெனில் வாழ்க்கையானது ஒரே அழுத்தத்தில் இருக்கும்போது, எதையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. இவ்வாறான மறதி ஏற்பட்டால், உடனே மனதை அமைதிப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.
 
பொதுவாக நரைமுடியானது பரம்பரை வழியாக அல்லது அதிகப்படியான மன அழுத்தத்தினால் தான் ஏற்படும். அதிலும் தற்போது இளம் வயதிலேயே  நரைமுடியானது வந்துவிடுகிறது.
 
எப்போதும், எதற்கெடுத்தாலும் எரிச்சலானது ஏற்பட்டால், அது நிச்சயம் மன அழுத்தத்திற்கான அறிகுறியே. சில சமயங்களில் எரிச்சல் அல்லது கோபம் வந்தால்  பிரச்சனையில்லை. ஆனால் அதுவே எப்போதும் இருந்தால், அது பெரும் பிரச்சனை.
 
மாதம் ஏதாவது ஒரு காரணத்திற்கு உடல் நிலை சரியில்லாமல் போகிறதென்றால், அதற்கு மன அழுத்தத்தினால், உடல் நோய் எதிர்ப்பு  சக்தியானது குறைவாக  உள்ளது என்பதற்கான அறிகுறியாகும். மன அழுத்தமானது அதிகம் இருந்தால், சீக்கிரமாகவே முதுமைத் தோற்றமானது ஏற்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்