சிக்சர் அடித்துவிட்டு அடுத்த பந்தை எதிர்நோக்கியபோது மாரடைப்ப்பு.. இளைஞர் பரிதாப மரணம்..!

Mahendran
திங்கள், 3 ஜூன் 2024 (16:00 IST)
மும்பையில் உள்ள நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் கிரிக்கெட் போட்டி நடந்த நிலையில் அந்த போட்டியில் இளைஞர் ஒருவர் சிக்ஸர் அடித்து விட்டு அடுத்த பந்தை எதிர்நோக்கி காத்திருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மும்பையில் உள்ள தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது இளைஞர் ஒருவர் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் ஒரு பாலில் சிக்சர் அடித்து விட்டு அடுத்த பந்துக்கு தயாராக இருந்தபோது திடீரெனம் மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்தார் 
 
உடனடியாக அவரை சக ஊழியர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகவும் மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்ததாகவும் மருத்துவமனை மருத்துவர்கள் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இதனை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிய போது திடீரென மாரடைப்பு  ஏற்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்