உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்: மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி...

Siva

திங்கள், 3 ஜூன் 2024 (07:12 IST)
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகளின் வார்ம் அப் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடந்த போட்டியில் மேற்கிந்திய அணி,  பப்புவா நியூ கினி அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது

நேற்றைய போட்டியில் பப்புவா நியூ கினியா அணி முதலில் பேட்டிங் செய்து 8 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 137 ரன்கள் எடுத்தால் மேற்கு இந்திய தீவுகள் வெற்றி என்ற நிலையில் அந்த அணி 19 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது

தொடக்க ஆட்டக்காரர் கிங் 34 ரன்கள் அடித்தார் என்பதும் சேஸ் 42 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நமீபியா மற்றும் ஓமன் நாடுகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் இன்று இரவு 8 மணிக்கு இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்