மத்திய அரசு நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கியை (YesBank )தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இதனால், அவ்வங்கியின் வாடிக்கையாளர்கள் ஏப்ரல் 3 ஆம் தேதிவரை ரூ. 50 ஆயிரம் மட்டுமே யெஸ் வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியும் என நேற்று அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பு, பணமிழப்பு நடவடிக்கை போன்று யெஸ் வங்கியில் பணம் இருப்பு வைத்துள்ளவர்களுக்கு சிக்கலாக இருப்பதாக பலரும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.
No YES பேங்க் பேங்க் - ராகுல் காந்தி விமர்சனம்
இதுகுறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: நோ யெஸ் பேங்க் ,பிரதமர் மோடியின் அனைத்து திட்டங்கள் மற்றும் யோசனைகள் இந்தியப் பொருளாதாரத்தை அழித்துவிட்டது, என பதிவிட்டுள்ளார்.