இமாச்சல பிரதேசத்தில் இந்திய தபால் துறையில் தபால் நிலையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் உலகின் உயரமான தபால் நிலையமாக அது சாதனை படைத்துள்ளது.
இந்திய தபால் துறையின் தபால் நிலையங்கள் நாடு முழுவதும் முக்கிய நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை இணைத்து வருகின்றன. தபால் நிலையத்தில் அனுப்பப்பட்டும் கடிதங்கள் எந்தவொரு பட்டித்தொட்டை வரை சென்றடைகின்றன.
இந்தியாவிலேயே மிக உயரமான பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஹிக்கிம். இந்த கிராமம் இமாச்சல பிரதேசத்தின் ஸ்பிட்டி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கிராமம் கடல் மட்டத்திலிருந்து 14,400 அடி உயரத்தில் உள்ளது. இதனால் இப்பகுதியை சுற்றி பார்க்க பல நாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர்.
இந்நிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்த கிராமத்தில் உள்ள தபால் நிலையத்தை தபால் பெட்டியை போலவே வடிவமைத்துள்ளார்கள். இந்த கிராமத்தில் தபால் நிலையம் 1983ல் தொடங்கப்பட்டது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் நண்பர்களுக்கு இந்த தபால் நிலையம் வழியே கடிதங்களை அனுப்பும் நிலையில் இந்த தபால் நிலையம் தற்போது உலகிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள தபால் நிலையமாக பெயர் பெற்றுள்ளது.