இமாச்சலப் பிரதேசத்தில் பிப்ரவரி 17 முதல் பள்ளிகள் திறப்பு!

திங்கள், 14 பிப்ரவரி 2022 (16:43 IST)
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 17 முதல் அனைத்து கல்வி நிறுவனங்களையும் திறக்க அமைச்சரவையில் முடிவு. 

 
வேகமாகப் பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 40,000 குறைந்துள்ளது. இந்தியாவில் கொரொனாவால் இதுவரை சுமார் 4,26,31,421 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரானாவால் புதிதாக 684 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,08,665 ஆக அதிகரித்துள்ளது.
 
இந்தியாவில் இதுவரை கொரொனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,15,85,711 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5,37,045 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 17 முதல் அனைத்து கல்வி நிறுவனங்களையும் திறக்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. 
 
மேலும் திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்களையும் பிப்.17 முதல் திறக்க இமாச்சலப் பிரதேச அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்