நாளை காரிய கமிட்டி கூட்டம் - காங்கிரஸ் பொ.செ., கே.சி.வேணுகோபால்அறிவிப்பு

Webdunia
சனி, 27 ஆகஸ்ட் 2022 (21:55 IST)
நாளை மாலை 3:30 மணிக்கு காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெறும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு உதய்பூரில் நடந்த 'சிந்தனை கூட்டத்தில்' கட்சியின் புதிய தலைவரை தேர்ந்து எடுக்கும் பணியை செப்டம்பர் மாதம் முடிக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கான நேரம் நெருங்கிவிட்டாலும், காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை கட்சியினர் தேர்ந்தெடுக்கவில்லை. தற்போது, ராகுல்காந்தி, இந்தியா முழுவதும் பாத யாத்திரை தொடங்கியுள்ள நிலையில், பொதுக்குழு கூட்டம் தள்ளிபோகலாம் என தகவல் வெளியானது.

இதற்கிடையே நேற்று  காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ராஜினாமா செய்தார். இது கட்சியில் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், நாளை மாலை 3:30 மணிக்கு காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்திற்கு சோனியா காந்தி தலைமை தாங்கவுள்ளதாக காங்கிரச் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். சோனியா காந்திவெளி நாடு சென்றுள்ள நிலையில் அவர் அங்கிருந்து காணொலி வாயிலாக இக்கூட்டத்தில் கலந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்