இங்க படிக்காதீங்க.. இதெல்லாம் போலி யுனிவர்சிட்டி! – பட்டியலை வெளியிட்டது யூஜிசி!
சனி, 27 ஆகஸ்ட் 2022 (09:26 IST)
இந்தியா முழுவதும் பல்கலைகழக அங்கீகாரம் பெறாமல் போலியாக செயல்பட்டு வரும் பல்கலைகழகங்களின் பட்டியலை யூஜிசி வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தன்னாட்சி பல்கலைகழகங்கள் பல செயல்பட்டு வரும் நிலையில் அவை யூஜிசி என்னும் பல்கலைகழக மானிய குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள போலி பல்கலைகழகங்கள் குறித்து ஆய்வு நடத்திய யூஜிசி 21 போலி பல்கலைகழகங்களை கண்டறிந்துள்ளது.
அதிகபட்சமாக டெல்லியில் 7 போலி பல்கலைகழகங்கள் செயல்பட்டு வருகின்றன. உத்தர பிரதேசம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா என பல மாநில பல்கலைக்கழகங்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் இருந்து எந்த பல்கலைக்கழகமும் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.
புதுச்சேரியிலிருந்து ஸ்ரீ போதி உயர் கல்வி கல்விக்கழகம் போலியானது என இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த பல்கலைகழகங்கள் பட்ட சான்றிதழ் வங்க உரிமை அற்றவை என்றும், இங்கு பெறப்படும் சான்றிதழ்கள் செல்லாது என்றும் யூஜிசி தெரிவித்துள்ளது.