வாட்ஸ்அப்பில் முதல்வரை கேலி செய்து சிக்கிய பெண் காவலர்

Webdunia
சனி, 24 ஜூன் 2017 (19:03 IST)
கேரள முதல்வரை கேலி செய்யும் வகையில் வாட்ஸ்அப்பில் வந்த செய்தியை ஃபார்வர்ட் செய்த பெண் காவலர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். 


 

 
திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவது தனது வாட்ஸ்அப் எண்ணுக்கு வந்த செய்தியை காவலர்கள் இருக்கும் குழுவில் பகிர்ந்துள்ளார். அதில் கேரள முதல்வர் அரசு சாதனை எனக்கூறி அவரை கேலி செய்யும் வகையில் இருக்கும் கேலி சித்திரம் ஒன்று இடம்பெற்று இருந்துள்ளது.
 
அவ்வளவுதான் இந்த செய்தி மற்றொரு காவலர் மூலம் மாநகர காவல் ஆணையர் காதுக்கு சென்றுள்ளது. இதையடுத்து அந்த பெண் காவலரை விசாரணைக்கு உட்படுத்த ஆணையர் உத்தரவிட்டார்.
 
மேலும் அந்த பெண் காவலருக்கு வந்த செய்தி எங்கிருந்து யாரால் அனுப்பப்பட்டது என சைபர் கிரைம் மூலம் விசாரனை நடத்தப்பட்டு வருகிறது. கேரளாவில் தற்போது மர்ம காச்சலால் இறப்புகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்தான் கேரள அரசை கேலிசெய்யும் வகையில் அந்த குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்