அடிதாங்கி கணவரின் காதை துண்டித்த கொல்கத்தா கோவை சரளா

Webdunia
புதன், 18 ஜூலை 2018 (16:09 IST)
கொல்கத்தாவில் மும்தாஜ் என்ற பெண் தனது கணவரின் காதை துப்பாக்கி முனையில் மிரட்டி துண்டித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 
கொல்கத்தா நர்கல்டங்க் என்ற பகுதியைச் சேர்ந்த முகமது தன்வீர் என்பவருக்கு மும்தாஜ் என்ற மனைவி உள்ளார். தன்வீரை விட அவரது மனைவி மும்தா 20 வயது மூத்தவர். 
 
மும்தாஜ் தன்வீரை தினந்தோறும் அடித்து கொடுமைப்படுத்துவதாக கூறப்படுகிறது. மனைவிக்கு பயந்து வீட்டை விட்டு ஓடும் தன்வீரை, மும்தாஜ் குண்டர்களை வைத்து பிடித்து வருவது வாடிக்கையாக இருந்துள்ளது. 
 
தன்வீர் தாய் மும்தாஜிடம் தனது மகனை விட்டு விடுமாறு கேட்டுள்ளார். வீட்டை விற்று பணம் கொடுத்துள்ளார். ஆனால் அப்போதும் மும்தாஜ் தன்வீரை விடவில்லை. இந்நிலையில் வீட்டை விட்டு ஓடிய தன்வீரை குண்டர்களை வைத்து பிடித்த மும்தாஜ், தனது சகோதரியுடன் சேர்ந்து தன்வீரை துப்பாக்கி முனையில் மிரட்டி காதை துண்டித்துள்ளார்.
 
இதுகுறித்து தகவலறிந்த தன்வீர் உறவினர்கள் ஒருவழியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸார் மும்தாஜ் மற்றும் அவரது சகோதரியை தேடி வருவதை தெரிந்தவர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்