ஜார்கண்டில் பாஜக தோல்விக்கு முக்கிய காரணம் இதுதான்!

Webdunia
திங்கள், 23 டிசம்பர் 2019 (20:07 IST)
ஜார்கண்ட் மாநிலம் உருவானதில் இருந்தே ஆட்சியில் இருந்த பாஜக, முதல்முறையாக காங்கிரஸ் கூட்டணியிடம் வீழ்ந்துள்ளது. இதற்கு நான்கு முக்கிய காரணங்கள் கூறப்படுகிறது.
 
1. பாஜக கூட்டணி அமைக்க தவறியது: கடந்த முறை ஜார்க்கண்ட் மாணவர் யூனியன் தேசிய கட்சியுடன் (ஏஜேஎஸ்யூ) இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால் இம்முறை தனித்து போட்டியிட்டது மிகப்பெரிய தவறு
 
2. கடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்ட நிலையில் இந்த தேர்தலில் இம்மூன்று கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றிக்கனியை பறித்துள்ளன,
 
3. பாஜகவின் உட்கட்சி பிரச்சனை. குறிப்பாக தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் பாஜகவின் மூத்த தலைவர் சர்யூ ராய், முதல்வர் ரகுவர்தாஸ்க்கு எதிராக சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  
 
4. சிபுசோரன் மகன், ஹேமந்த் சோரன் முதல்வர் வேட்பாளராக அறிமுகம் செய்யப்பட்டதால் பழங்குடியினர் ஓட்டுக்கள் ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைத்துள்ளது. 
 
மேற்கண்ட நான்கு காரணங்களே பாஜகவின் தோல்விக்கும் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கும் காரணமாக கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்