டெல்லியில் மம்தா... அடுத்தடுத்த அதிரடி சந்திப்புகள்!

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (10:50 IST)
காங்கிரஸ் தலைவர் சோனியா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 
மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பல முக்கியத் தலைவர்களை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடியை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். 
 
முன்னதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத்தையும் மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசினார். இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று சந்தித்துப் பேச இருக்கிறார் மம்தா பானர்ஜி. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்