மீண்டும் டெல்லிக்கு புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்!

ஞாயிறு, 18 ஜூலை 2021 (17:39 IST)
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சற்றுமுன்னர் சென்னையிலிருந்து டெல்லிக்கு கிளம்பி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே மேகதாது அணை பிரச்சனை கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது என்பது தெரிந்ததே. மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக மாநில அரசும் மேகதாது அணையை கட்ட விடமாட்டோம் என்றும் தமிழக அரசும் கூறி வருகிறது 
 
இந்த நிலையில் சமீபத்தில் டெல்லி சென்ற கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அவர்கள் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா அவர்களை சந்தித்த நிலையில் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் டெல்லி புறப்பட்டார் 
 
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அவர் குடியரசுத் தலைவரை நாளை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பின் போது மேகதாது அணை விவரம் குறித்து குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரிடம் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்