ஜனாதிபதி மாளிகையில் சி.ஆர்.பி.எப் வீராங்கனைக்கு திருமணம்.. வரலாற்றில் முதல் முறை..!

Mahendran
செவ்வாய், 4 பிப்ரவரி 2025 (17:58 IST)
ஜனாதிபதி மாளிகையில் சி.ஆர்.பி.எப் வீராங்கனைக்கு திருமணம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் வரலாற்றில் முதல் முறை என்று கூறப்படுகிறது.

இந்தியாவின் முதல் குடிமகன் வாழும் மாளிகை தான் ஜனாதிபதி மாளிகை என்ற நிலையில், இந்த மாளிகையில் முதல் முறையாக ஒரு திருமணம் நடைபெற உள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் பாதுகாப்பு பணிக்கு தலைமை ஏற்று இருக்கும் சி.ஆர்.பி.எப் வீராங்கனை பூனம் குப்தா, ஜம்மு காஷ்மீரை சேர்ந்த சி.ஆர்.பி.எப் வீரர் அவினாஷ் குமார் என்பவரை பிப்ரவரி 12ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளார்.

இந்த நிலையில், பூனம் குப்தா  ஜனாதிபதி மாளிகையின் பாதுகாப்பு பணிகளை தலைமை ஏற்று கவனித்து வருகிறார். அவருடைய அர்ப்பணிப்பு, தொழில் திறன், நடத்தை விதிகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஜனாதிபதி மாளிகையில் அவருடைய திருமணத்தை நடத்த ஜனாதிபதி திரௌபதி முர்மு அனுமதி அளித்திருப்பதாக தெரிகிறது.

இதனால், நாட்டின் முதல் குடிமகன் மாளிகையில் திருமணம் செய்து கொண்ட முதல் பெண் என்ற பெருமையும் பூனம் குப்தாவிற்கு ஏற்படும். இதன் மூலம் புதிய வரலாறு படைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜனாதிபதி மாளிகையில் உள்ள அன்னை தெரசா வளாகத்தில் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், மணமக்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது..

Edited by Mahendran


தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்