ஜனாதிபதி மாளிகையில் பாதுகாப்பு பணிக்கு தலைமை ஏற்று இருக்கும் சி.ஆர்.பி.எப் வீராங்கனை பூனம் குப்தா, ஜம்மு காஷ்மீரை சேர்ந்த சி.ஆர்.பி.எப் வீரர் அவினாஷ் குமார் என்பவரை பிப்ரவரி 12ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளார்.
இந்த நிலையில், பூனம் குப்தா ஜனாதிபதி மாளிகையின் பாதுகாப்பு பணிகளை தலைமை ஏற்று கவனித்து வருகிறார். அவருடைய அர்ப்பணிப்பு, தொழில் திறன், நடத்தை விதிகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஜனாதிபதி மாளிகையில் அவருடைய திருமணத்தை நடத்த ஜனாதிபதி திரௌபதி முர்மு அனுமதி அளித்திருப்பதாக தெரிகிறது.